Friday, October 30, 2009

தீவிரவாதம் போதிக்குதா மதரசாக்கள்?


உத்தர் பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், அங்குள்ள ஹிந்துக்கள் அரசு நடத்தும் பள்ளிகளுக்கு செல்லாமல் மதரசாக்களுக்கு சென்று கல்வி கற்கவே விரும்புகின்றனர் என்று அறிவித்துள்ளது.மேலும் இந்த ஆய்வறிக்கையில் இந்த மதரசாக்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையில் இந்துக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.

இஸ்லாமியா அராபியா ஆலிமுல் உலூம் என்ற மதரசாவில் முஸ்லீம் மாணவர்களுக்கு அரபி மற்றும் உர்துவும் இந்து மாணவர்களுக்கு சமஸ்கிருதமும் கற்றுத்தரப் படுகின்றது. இந்த மதரசா உ.பி யின் பாரபங்கி பகுதியில் உள்ளது.இந்த ஆய்வறிக்கையை லக்னோவை மையமாக கொண்டு செயல்படும் Better Education through Innovation (BETI) என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு ஐந்து மதரசாக்களில் நடத்தப்பட்டது. இந்த ஐந்து மதரசாக்களும் அரசு உதவியின்றி அப்பகுதி மக்களின் பொருளாதார உதவியைக்கொண்டும், நன்கொடைகள் மற்றும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் ஆகியவற்றை கொண்டுமே நடத்தப் பட்டு வருகின்றன.

இந்த ஐந்து மதரசாக்களில் மூன்று மார்க்கக் கல்வியை தவிர உலக கல்வியையும் கற்றுத் தருகின்றன.UNICEF -இன் தலைவர் வினோபா கவுதம் இது பற்றி கூறுகையில், "மதரசாக்கள் குழந்தைகளுக்கு ஒரு முழுமையான கல்வியின் சூழலை உருவாக்கி தருகின்றது. இது மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும்.

இது போன்ற கல்விச் சூழல் கல்வி கற்பதற்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்" என்று கூறினார்.UNICEF சார்பில் கவுதம் இந்த மதரசாக்களை தான் அடிக்கடி பார்வையிட்டு வருவதாகவும் அதற்கான புத்தகங்களை ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிப்பெயர்த்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
------------------------------

மதரசாவில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்று சில மதவாதிகள் சொல்லிவருகிறார்கள்,அதையே மீடியாக்களும் வாந்தி எடுக்கின்றன.ஆனால்,உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்தால்,இதே போன்ற மதரசாக்களை நாடெங்கும் நடத்த அவர்களே முன்வருவார்கள்.இந்தியாவும்,பிற நாடுகளும் அங்குள்ள மதரசாக்களுக்கு தங்கள் அதிகாரிகளை அனுப்பி பாடம் படிப்பித்துகொடுத்தால் நல்லது,இது போன்ற விஷகருத்துக்களை பரப்பி,அண்ணன்-தம்பிகளாய்,அக்கா-தங்கைகளாய் பழகி வரும் இந்து-முஸ்லிம் உறவை சீர் குலைக்க நினைக்கும் இவர்கள் எண்ணம் இன்ஷா அல்லாஹ்,எடுபடாது.

2 comments:

தமிழ்நாடு தினசரி செய்திகள் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

plz visit : www.tamilnadudailynews.blogspot.com

இது எனது தளம் நீங்கள் செய்திகளை எனது தளத்தில்
வெளியிடலாம்

பாவா ஷரீப் said...

//அண்ணன்-தம்பிகளாய் தங்கைகளாய் பழகி வரும் இந்து-முஸ்லிம் உறவை சீர் குலைக்க நினைக்கும் இவர்கள் எண்ணம் இன்ஷா அல்லாஹ்,எடுபடாது.//

இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நடக்காது