Tuesday, November 3, 2009

பாத்து முடிங்கம்மா!இல்லன்னா பிரச்சனைதான்!!

யாண்டி,அவோ ஊட்டுல நிறைய சொத்து இருக்குடி,அந்த ஊட்டுல உள்ள ஒரு பையனை எடுத்து ஒன் மொவளுக்கு முடிச்சா என்னடி?

அவனுக்கு கெட்ட பழக்க எல்லாம் இருக்குடி,வேண்டாம்?

அட போடி இவளே,ஆம்புளைன்னா இப்பிடித்தாண்டி இருப்பான்.சொத்து நெறைய இருக்கு,ஒன மவதான் அனுபவிக்கப்போரா?

சரி,வரதட்சணை அப்பிடி,இப்பிடின்னு நெறைய கேப்பாங்களே?

ஆமாம்,வூடு கேப்பாங்க,பணம்,நகைன்னு கேப்பாங்க,அங்க-இங்க பொரட்டி,அந்த மாப்பிள்ளையை எடுத்தா ஒனக்குதாண்டி நல்லது.யோசிச்சிக்க,சொல்றத சொல்லிப்புட்டேன்.

ஆமாண்டி நீ சொலறது சரிதான்,இந்தக் காலத்துல இது சகஜம்தான்,நம்ம கேக்கலன்னா வேற யாராச்சும் கொத்திக்கிட்டுப் போய்டுவாங்க.
------------------------------------------------------
அவளைபோய் ஒன் மொவனுக்கு கேட்டியாமே?

ஆமாம்,கேட்டன், யான் எதுக்கு கேக்குறியோ?

அவ ஒரு மாதிரிடி,தொழ மாட்டா,ஒழுக்கமா இருக்க மாட்டா,ஒரே சினிமா பைத்தியம்,டிவியே கதியேன்னு கெடப்பா.

ஆனா நல்ல அழகாம்லோ?

ஆமாண்டி,அழகா இருந்துட்டா போதுமா?நல்ல ஒழுக்கமும்,தொழுகையும்தானே முக்கியம்.

அவன் ஆசைப்பட்டுட்டான்,நான் என்னா செய்ய?
------------------------------------------------------
இப்பிடித்தாங்க ஆல்மோஸ்ட் எல்லா ஊர்லயும் நடந்துக்கிட்டு இருக்கு,இந்த மாதிரி பணம்,அழகு இந்த மாதிரி மட்டும் பையனையோ,பெண்ணையோ பாத்துட்டு,நல்ல ஒழுக்கம்,மார்க்கப்பற்று இதெல்லாம் இருக்கான்னு பாக்காததுனால,அவன் கொஞ்ச நாள்ல இவளைப் பிடிக்காம,வேறொருத்தியை நாடிப் போறான்,அதே மாதிரி,இந்த இவளும் வேறொருவனை கள்ள புரஷனாக்கிக் கொள்ளுரா? கடைசியில,அந்த குடும்பம் சீரழிஞ்சி,எல்லாமே நாசமாயிடுது.இதுனால அவங்க ரெண்டு பேருக்கு மட்டுமில்ல,அவங்க குடும்பம் மட்டுமில்ல,பாவம் பிள்ளைகளும்தான்.இதுனால இந்த உலகத்துலயும் அழிவு,மறுமையிளையும் அழிவு,கைசேதம்.

கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாத்தா,நான் சொன்னது சரின்னு உங்களுக்கே தெரிய வரும்.என்னக்கி குரானையும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் ஹதீசையும் கடைபிடிககிறோமோ,அப்பத்தான் இங்கேயும் வெற்றி,அங்க மருமையிளையும் வெற்றி,இன்ஷா அல்லாஹ்.இத நம்ம கண்கூடா பாத்துக்குட்டு இருக்கோம்.
----------------------------------------------------------
அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: “எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)


மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)

9 comments:

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான பதிவு , ஹதீஸுடன், வரதட்சனை, இக்காலத்தில் உள்ள பிள்ளைகளின் நிலை (தொழமால் டீவி பார்பப்து) எல்லாம் எடுத்து சொல்லியிருக்கீங்க

கமலா ராஜரத்தினம் said...

இது முஸ்லிம்களுக்கு மட்டும் உள்ள அறிவுரை அல்ல.இந்துக்களுக்கும் உள்ள அறிவுரைதான்,இந்து சமுதாயத்திலும் இப்படி உண்டு,நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளைக் கேட்டு ஆனந்தம் அடைந்தேன்.எல்லாவற்றையும் எவ்வளவு அழகாக சொல்லியுள்ளார்கள் நபிகள் நாயம் அவர்கள்.

இளையான்குடி அஹ்மத் கபீர்,அதிராம்பட்டினம் முஹம்மத் பஷீர் said...

இது எல்லாருக்குமான,எல்லா ஊர்களுக்குமான புத்திமதி,ஒழுங்கா,உருப்படியா இருக்கணும்னா,வரதட்சணை பணத்துக்கு ஆசைப்பட்டு கல்யாணம் கட்டாதீங்க.

பழைய நண்பன் said...

நல்ல பயனுள்ள கட்டுரைகளை தொடர்ந்து தந்துகொண்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமின்றி அனைத்து சமூகத்திற்கும் பாடமாக அமைந்துள்ளது இக்கட்டுரை. உள்ளூர் வழக்கத்திலுள்ள வார்த்தைகளை அல்லி வீசியிருக்கிறீர்கள், ம்ம்ம்...நல்லா இருக்கு! கருத்துகள் சேருமிடத்திருக்கு நல்லபடியாக போய் சேர்ந்தால் 100% பயன் தான். தொடருங்கள்...உங்கள் எழுத்து பணி வற்றாத ஆறுபோல் ஓடட்டும்!

பாவா ஷரீப் said...

ஆண்கள் வரதட்சணை கேட்கிறார்களோ இல்லியோ, வரதட்சணை தந்து திருமணமான
பெண் தனக்கு பிறக்கும் ஆண் மக்களுக்கு கைக்கூலி கண்டிப்புடன் கேட்கிறார்கள்.

திருத்தப்பட வேண்டிய தவறு..... பாராட்டப்பட வேண்டிய பதிவு

சலீம்,அதிரை said...

ரஸுலுல்லாஹ் ஸல் அவர்களின் சொல்படி நடந்தால்,சங்கத்திலோ,கோர்ட்டிலோ விவாகரத்து நோடிஸ் கொடுக்க வேண்டியதில்லை.எல்லாரும் புரிந்து நடந்தால் பிரச்சனை இல்லை.

crown said...

சனி, 7 நவம்பர், 2009
கண்களை குளமாக்கிவிட்டு வீரமரணம் அடைந்த சகோதரன். www.adiraipost.blogspot.com

பாத்திமா ஜொஹ்ரா said...

கருத்து சொன்ன எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

Jaleela Kamal said...

அருமை சகோதரி பாத்திமா ஜொஹ்ரா வந்து என் பிலாக்கில் உங்கள் அவார்டை பெற்று கொள்ளுங்கள்.