Saturday, January 23, 2010

ஒட்டகத்தை கட்டு


சில பேரு இப்பிடிதாங்க,தான் எந்த முயற்சியும் பண்ணாம,இறைவன் பாத்துக்குவான் என்று சோம்பேறியாக காலம் தள்ளுவார்கள்.கேட்டா,அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான்,அவன் தருவான்,நாம ஏன் கவலைப்படணும் என்று சொல்லி முடங்கிக் கிடப்பார்கள்.


அது தப்புங்க.இறைவன் மேல நாம் முதல்ல நம்பிக்கை வைக்கனும்தான்.ஆனா அதுக்காகாக வேண்டி,நான் நம்புறேன் அதுனால எந்த முயற்சியும் பண்ண மாட்டேன்னு சொலது சரி இல்லங்க.

எந்த ஒண்ணா இருந்தாலும்,நாம முயற்சி பண்ணனும்,அதோட இறைவனுடைய உதவியை நாடி,அவனிடம் துவா(பிரார்த்தனை)செய்ய வேண்டும்.

உதாரணமா,ஒரு காரியம் பண்ணவேண்டும்,இல்ல எதோ ஒரு செயல் பண்ண வேண்டும் என்றால்,அந்த காரியம் நிறைவேற,செயல் துவங்க,நாம் முயற்சி எடுத்து-அந்த காரியம் நிறைவேற உழைக்க வேண்டும்.அத்துடன் நிறுத்தாமல்,யா அல்லாஹ்,என் இறைவனே,இந்த காரியத்தில் இறங்கிவிட்டேன்,(இறங்க இருக்கிறேன்)அந்த நல்ல காரியம் நிறைவேற நீதான் உதவி செய்ய வேண்டும் என்று இறைவனிடம் பொறுப்பு சாட்ட வேண்டும்.

இதைத்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்கள்,"ஒட்டகத்தை கட்டிவிட்டு,அதன் பாதுகாப்புக்கு இறைவனிடம் துவா செய்யுங்கள்"என்று.

ஒட்டகத்தை கட்டாமல்,அது பாட்டுக்கு விட்டு விட்டு,இறைவன் பாத்துக் கொள்வான் என்று இருந்து விடக் கூடாது என்று நபி அவர்கள் வலியுறுத்தினார்கள்.

எனவே,சோம்பித்திரியாமல்,நன்கு முயற்சிக்க,உழைக்க வேண்டும்,அத்துடன் அல்லாஹ்விடம் அந்த முயற்சி,உழைப்பு வெற்றி பெற பிரார்த்தனை செய்ய வேண்டும்.சரிதானுங்களே


இன்ஷா அல்லாஹ்,
மற்ற விஷயங்கள

பிறகு பார்ப்போம்.

11 comments:

ZAKIR HUSSAIN said...

இது போன்ற உற்சாகமான விசயஙகளை
நிறைய எழுதுங்கள். நம்மவ்ர்கள், உண்மை எது "விரக்தி
தத்துவம்" எது என இனம் புரியாமல் இருக்கிறார்கள்.

முயற்சி செய்யாமல் இருப்பதற்கென்றே
சில பழமொழிகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள்:

* விதை விதைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.
* ஒட்டுர மண்ணுதான் ஒட்டும்.
* பணம் ஒரு பேய்
* நாம அவ்வளவு படிக்களையே!!
* எல்லாத்துக்கும் ஒரு காலம் வரணும்.

இப்படி பல...எதுவும் நிஜத்துடன் ஒட்டாது.

ZAKIR HUSSAIN

ஸாதிகா said...

arumai arumai..

M.A.K said...

ஆம், சரிதானுங்க

இப்னு அப்துல் ரஜாக் said...

very nice


http://peacetrain1.blogspot.com/2010/01/6.html

அன்புத்தோழன் said...

Sariya sari illanu sonna thappaaiduma....
illa thappa sarinu sonna dhan sari aaiduma.....

ha ha ha... sari sari na kolapa varala...

migachariya sonneengama... ungal historical posts anaithayum padichutruken... thangal nalla muyarchigal anaithum vetriyadaiya iraivanai prarthithavanai... vidaiperum....

anbutholan.blotspot.com

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி ZAKIR HUSSAIN, ஸாதிகா,MAK, பேனாமுனை,anbu thozhan.உங்கள் அன்புக்கும்,ஊக்கத்துக்கும்.

ஹுஸைனம்மா said...

நல்ல கருத்து. நன்றி ஃபாத்திமா.

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு. முயற்சி, உழைப்பு. கூடவே பிரார்த்த்னை. மிகச் சரி.

Jaleela Kamal said...

நல்ல அருமையான பதிவு பாத்திமா/

பாத்திமா ஜொஹ்ரா said...

கருத்து தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

ஜெய்லானி said...

நல்ல அருமையான பதிவு