Sunday, July 31, 2011

ரமலான் வாழ்த்துக்கள்

பிரிவின் இடைவெளி


ஐயம்: 

பொருள் ஈட்டும் காரணத்தினாலோ மற்ற பிற காரணத்தினாலோ மனைவியினை விட்டு ஒரு சில காலங்கள் பிரிந்து வாழ்வதால் பல தவறான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு இஸ்லாம் என்ன சொல்கிறது?

- சகோதரர் முஹம்மது அலி ஜின்னா (மின்னஞ்சல் வழியாக)

தெளிவு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

'வாழ்வாதாரத் தேவைகளைப் பெறுவதற்காக பொருளீட்டும் காலத்தில் கணவனும் மனைவியும் பிரிந்திருக்கும் சந்தர்ப்பத்தில், தம்பதியரில் ஒருவரிடமோ அல்லது இருவரிலுமோ தவறான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது' என்பதை, "கற்பொழுக்கம் தவறி, சோரம் போய்விடுதல்" என்று வெளிப்படையாகவே எடுத்துக்கொள்வோம்! இவ்வாறு நிலைதடுமாறிவிடுவதையும் இஸ்லாம் விபச்சாரம் என்றே சொல்கிறது. விபச்சாரம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு:
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது (17:32).
ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், "என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்" என்று சொல்ல, இச்செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால்தான் அக-புற மானக்கேடான செயல்கள் (ஆபாசங்கள்)அனைத்தையும் தடைசெய்துவிட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகிறவர் அல்லாஹ்வைவிட வேறெவரும் இல்லை. எனவேதான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகிறவர் வேறெவருமில்லை. எனவேதான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: மூகீரா பின் ஷுஅபா (ரலி) நூல்கள்: புகாரி 7416, முஸ்லிம் 3001, அஹ்மத், தாரிமீ.

மணமுடித்திருந்தும் மனைவி கருத்தரிப்பதற்காக கணவனல்லாத மாற்றானுடன் உடலுறவு கொள்வதும், ஏக காலத்தில் ஒருத்திக்குப் பத்து கணவர்கள் என்றும் விபச்சாரம் என்பது திருமணம் என்ற பெயரிலேயே வெளிப்படையாக ஆங்கீகரிக்கப்பட்டிருந்த காலத்தில் (புகாரி 5127, அஹ்மத்) இஸ்லாத்தின் மீளெழுச்சி தொடங்கியது. ஏக காலத்தில் ஒருத்திக்கு ஒரு கணவன் என்கிற மஹர் கொடுத்து மணமுடிக்கும் திருமணத்தை ஆகுமாக்கி, மற்றவை வெளிப்படையான / மறைவான மானக் கேடாகும் என்று இஸ்லாம் தள்ளுபடி செய்துவிட்டது. பருவமடைந்த பின்னர் இஸ்லாத்தில் தம்னை இணைத்துக் கொள்வோர் விபச்சாரம் செய்வதில்லை என்கிற தார்மீக உறுதிமொழியையும் வழங்கிடவேண்டும்!

நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளைக் கொல்வதில்லை என்றும், கைகள்-கால்கள் (வைத்து) இடையில் அவர்கள் கற்பனை செய்கிற அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான(காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து(எனும் வாக்குறுதி) அளித்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன் (60:12).

ஒழுக்கம், பண்பாடு கற்பு நெறியுடன் வாழ்தல் அவசியம் என முழு மனித குலத்திற்கு அழுத்தமாக அறிவுரை வழங்கியுள்ளதன் மூலம் இஸ்லாம் என்பது முழு மனுக்குலத்தின் வாழும் வழி; வாழ்க்கை நெறி என்பதை உறுதி செய்கிறது. மணமுடிக்காத, மணமுடித்த ஆண் பெண்ணாக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் விபச்சாரத்தின் பக்கம் நெருங்கவேண்டாம். இதுவே இறைக் கட்டளையாகும்! இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர் வெளிப்படையான, அந்தரங்கமான மானக் கேடான செயல்களிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயப்படுத்தியுள்ளது.

இனி, கேள்விக்கு வருவோம்.

மணம் செய்து கொண்ட ஆணாயினும் பெண்ணாயினும் பிறர் மனை நாடுவதற்கான அடிப்படையாக உள்ளவை:
  1. தம்பதியரிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமல் போவது
  2. மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும் மரியாதையும் கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய கனிவும் அரவணைப்பும் குறைந்து காணப்படுவது.
  3. இல்லற சுகத்தில் ஏமாற்றம்
  4. உடன் போக்குதலை ஊக்குவிக்கும் சின்னத்திரை சீரியல்களால் மனரீதியான மாற்றம்
  5. மஹ்ரமில்லாத ஆண்களோடு பெண்களும் மஹ்ரமில்லாத பெண்களோடு ஆண்களும் நெருங்கிப் பழகும் சூழல்
  6. இறையச்சக் குறைவு
  7. நீண்ட காலப் பிரிவு
மேற்காணும் ஏழு காரணங்களுள் கேள்விக்குத் தொடர்பான "நீண்ட காலப் பிரிவு" என்பது இறுதியானதாக இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்வுகளுக்குத் தகுந்தாற்போல் வரிசை முன்/பின் ஆகலாம்.
  • கணவன் கொலை; கள்ளக் காதலனும் மனைவியும் கைது!
  • தம்பியோடு உறவு கொண்ட மனைவியைத் தட்டிக் கேட்ட கணவனுக்குக் கத்திக் குத்து!
  • கணவனை மீட்டுத் தருமாறு மனைவி நூதனப் போராட்டம்!
  • இரண்டு குழந்தைகளைத் தவிக்க விட்டு, தாய் தலைமறைவு; காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு!
  • புதுப் பெண் தலைமறைவு; திருமணம் ஆன ஒரு மாதத்தில் மாயம்!
  • கணவனின் துரோகம் காரணம்; மனைவி தற்கொலை முயற்சி!
திருமணம் ஆனதிலிருந்து பிரிந்துவிடாமல் ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்தவர்களைப் பற்றி மேற்காணும் செய்திகளுள் ஏதேனும் ஒன்றை வாரந் தவறாமல் நாளிதழ்களில் நாம் வாசித்து வருகிறோம்.

மணமுடித்தலின் நோக்கம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் சட்ட ரீதியாக பரஸ்பரம் இல்லற சுகம் அடைவதும் அதன் மூலம் மழலைச் செல்வங்களைப் பெறுவதும் ஆகும். இல்லறத்தில் இணைந்த தம்பதியரிடையே தாம்பத்திய சுகத்தைப் பறிமாறிக் கொள்ள முடியவில்லையெனில் அவர்கள் மணமுடித்துக் கொண்டது அர்த்தமற்றதாகிவிடும்.

வாழ்க்கையில் இணைந்த தம்பதியர் இருவரும் தாம்பத்திய சுகத்தைப் பெறுவதில் பொதுவாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம். வெளியூர் செல்லும் கணவன், ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குள் திரும்புவதாகக் கூறி, மனைவியின் சம்மதத்துடன்தான் செல்கிறான். திருமண உறவை ஒப்பந்த உறவாக இஸ்லாம் அறிவித்திருப்பதால், கணவனிடமிருந்து பெறும் தாம்பத்திய சுகம் எப்போதெல்லாம் தனக்கு வேண்டும் என்பதையும் மனைவி தீர்மானிக்கலாம். நீண்ட காலம் கணவனைப் பிரியமுடியாது எனக் கருதும் மனைவி, கணவன் தன்னை நீண்ட நாள்கள் பிரிந்து செல்வதைத் தாராளமாகத் தடுத்து நிறுத்தலாம். இதற்கான உரிமை தம்பதியர் இருவருக்கும் உள்ளது!

ஒரு வாரம், ஒரு மாதம், ஓராண்டு அல்லது இதைவிட அதிகமான காலம் கணவன் மனைவி பிரிந்திருக்க நேரிடும் என்ற நிலை ஏற்படின் இதைத் தெரிந்து தம்பதியர் இருவரும் சம்மதித்தப் பின்னரே ஒருவரையொருவர் பிரிகின்றனர்.
இன்னும் சொல்வதென்றால், கவுரவத்துக்காகவும் ஆடம்பரச் செலவுகளுக்காகவும் தன் கணவன், தன்னைப் பிரிந்து சென்று வெளிநாட்டில் பொருளீட்டுவதை விரும்பும் மனைவிகளே நம் சமுதாயத்தில் அதிகம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. (விதிவிலக்காக, வெகு சொற்பமான கணவர்கள் தங்கள் மனைவியரைத் தாங்கள் பொருளீட்டும் வெளிநாடுகளுக்கு வரவழைத்துக் குடும்பத்துடன் வாழ்கின்றனர்).
"திரைகடலோடியும் திரவியம் தேடு" எனும் முதுமொழி நம் சமுதாயத்துக்கென்றே ஆகிப்போனதுபோல், "கட்ட வெளக்கமாறா இருந்தாலும் கப்ப வெளக்கமாறா இருக்கணும்" (குப்பை அள்ளினாலும் மாப்பிள்ளை வெளிநாட்டில் அள்ளுபவராக இருக்க வேண்டும்) எனும் புதுமொழி நம் சமுதாயப் பெண்மணிகளால் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு, கணவனைக் கழுத்தைப் பிடித்து வெளிநாட்டுக்குத் தள்ளிவிட்டு, தெரிந்தே பிரிந்த பின்னர் உணர்வுக்குப் பலியாகி விபச்சாரத்தை நாடுவது ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் துரோகச் செயல்!

நவீன காலத்தில் வீட்டிலும் வெளியிலும் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் தாரளமாக உள்ளன. வீட்டில் தொலைக்காட்சியாகவும், வெளியில் நேரிலும், விளம்பரக் காட்சியாகவும் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை!
இந்நிலையில் இறையச்சத்தை மேன்மைப்படுத்தி மற்றவற்றைத் முற்றாகத் தவிர்த்துக்கொள்வது மட்டுமே மேற்காணும் கேள்விக்கு இஸ்லாம் கூறும் தீர்வாக அமையும்.

அனைவரும் அல்லாஹ்வின் மார்க்கத்தை அழகாகப் பின்பற்றிட அருள் புரிவானாக!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Wednesday, July 20, 2011

இதுதான் இஸ்லாம்

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் அறிமுகமற்றவருக்கும் ஸலாம் (முகமன்) சொல்வதுமாகும்" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்

shanmugam.jpgஇளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.

’வஹியாய் வந்த வசந்தம்’  என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்

தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.
இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

தகவல் இளைஞான்குடி யூசுப், பென்சில்வேனியா, அமெரிக்கா 

Friday, July 15, 2011

அற்புதம் உலகில் இது ஒன்று தான்

மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.

இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இptஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.

கிணற்றின் அளவு

இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.

எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.

எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.

பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை

Saturday, July 9, 2011

நிலமெல்லாம் ரத்தம்

...ஒன்றல்ல; இரண்டல்ல; முந்நூற்று அறுபது கடவுள்களை சிலைகளாகச் செய்துவைத்து வணங்கும் இனம். உழைத்துச் சாப்பிட்டு, சந்ததி பெருக்கி, மாண்டுபோய்க்கொண்டிருந்த இனம். பெண்கள் படைக்கப்பட்டதே, சந்ததி பெருக்குவதற்குத்தான் என்று உறுதிபட நம்பியதோர் இனம்.

ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் முட்டி மோதிக் கொண்டிருந்த இனம். படிப்பறிவில்லாத இனம். முரட்டு இனம்.

யுத்தவெறி பிடித்த இனம். தமது பெருமை என்னவென்றே உணராமல் காலம் காலமாக வீணடித்துவிட்ட இனம்.....



தொடர்ந்து படிக்க கிளிக்குங்கள் 






Saturday, July 2, 2011

”ஹிஜாப் என்னுடைய அணிகலன்! மும்பையில் ஒரு ’நிகாப்’ புரட்சி

afreenமும்பையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நின்று முனிசிபாலிட்டியின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்து செல்வதில் ஒரு நிகாப அணிந்த சகோதரிக்கும் பங்குண்டு என்றால்...மிகை என்ன... மிக மிக மிகைதான் இல்லையா.

18 வயதிலேயே இஸ்லாத்திற்கு வந்ததோடல்லாமல் திருமணத்திற்கு பின் சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவும் மக்கள் பிரட்சினைக்காக பாடுபடவும் வேண்டும் என்றதும் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடும் இடத்தில் அக்கறையை மட்டும் மையமாக கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறார், சகோ.ஆஃப்ரீன். 

”ஹிஜாப் என்னுடைய அணிகலன், அதை அணிவதால் என் சமூகத்திற்கு பாடுபட எனக்கு எந்த வித தடையுமில்லை” என்கிறார் சகோதரி. நிகாபை அணிவதாலும், முஸ்லிமாய் இருப்பதாலும் இது வரை தடையெதுவும் கண்டதில்லை எனக்கூறும் இந்த சகோதரி, தன் வெற்றிக்கு முதல் காரணமாக அல்லாஹுத’ஆலாவையும், அதன் பின் தன்னுடைய ஒவ்வொரு அடியிலும் துணை நிற்கும் கணவனையுமே புகழ்கிறார். நிகாப் இருப்பதால் வேலை செய்யுமிடத்தில் ஏதேனும் இடையூறோ தயக்கமோ இருக்குமே என்றால், எல்லா நிலையிலும் இந்த மக்கள் எனக்கு துணை நிற்பதோடல்லாமல், சில சமயம் எதிர்பார்க்காத அளவிற்கும் ஒத்துழைப்பு நல்கின்றனர் என்கிறார்.

மராத்தி, ஹிந்தி, குஜராத்தி தவிர ஆங்கிலமும் தெரிந்த இவர், தேர்தலில் முக்கிய வாக்குறுதிகள் அளித்தது குடிநீர், ரோடு மற்றும் சுகாதார வசதிகளின் மேல்தான். அதனாலேயே பிரச்சார நேரத்தில் சில பிரச்சினைகளையும் சந்தித்துள்ளார். “அன்றைய தினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதி மக்களோ அதிகாலை 4 மணிக்கே எழுந்து குடிநீருக்காக லைனில் நிக்க வேண்டிய நிலை, எனவே அவர்களின் கோபாவேசத்தினாலும், அதில் ஏற்பட்ட சலசலப்பினாலும் கிட்டத்தட்ட என்னுடைய வாகனத்திலிருந்தே கீழே விழும் சூழ்நிலையாகி விட்டது” என்கிறார்.

தன்னுடைய பணியில் சாதனையாக சகோ.ஆஃப்ரீன் நினைப்பது, முனிசிபாலிட்டியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மசோதா. அப்படி என்ன மசோதா? பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு கொண்டு போகும்போதும், போஸ்ட்மார்ட்டம் முடித்து வரும்வரையும் ஒரு பெண் டாக்டரும், உதவிக்கு ஒரு பெண்ணும் கட்டாயம் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆணையே அது. ஏன் இப்படி ஒரு மசோதா என்றால், சட்டென பதில் வருகிறது, சகோதரியிடமிருந்து. “ஓர் தடவை ஒரு 20 வயதுப்பெண் விபத்தில் இறந்து போனார். அவருடைய உடலை வாங்க மருத்துவமனைக்கு சென்றபோது ஒரு மனிதன் அந்தப்பெண்ணின் உடலில் போர்வை போர்த்தும் சாக்கில் அவளை அவசியமற்ற விதத்தில் தொடுவதைக் கண்டேன். அன்றெழுந்த முடிவு இது” என்கிறார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினையே கல்வியறிவில்லாததும், வேலைஞானமும் இல்லாததுதான் என்னும் சகோ.ஆஃப்ரீன், தன்னுடைய கணவரின் துணை கொண்டு மக்களுக்கென ரேஷன் கார்டு, பிசி, ஓபிசி பத்திரங்கள், வாக்காளர் அட்டை போன்ற அத்தியாவசிய அட்டைகளை பெறுவதற்கான வழிமுறை வகுப்புகளையும் அவ்வப்போது நடத்துகிறார். ”நம் முஸ்லிம் சமூகத்தில் இந்த மாதிரி தேவையான அட்டைகளை வாங்கும் வழிமுறைகள் தெரியாததே ஸ்காலர்ஷிப், அரசாங்க வேலை போன்ற பல அரசாங்க உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போக வைக்கிறது” என்கிறார். இதற்காக கோடை காலத்தில் மாதம் முழுக்கவும் கேம்ப்கள் நடத்துகிறார். இவரின் உதவியாளார்கள், வீட்டிற்கு வீடு சென்று கதவை தட்டியழைத்தும் வந்து இவற்றில் பங்கு பெற வைக்கின்றனர்.

அரசியலில் நுழைந்து விட்டால் ஆண்களின் ஆதிக்கத்தை சந்தித்துத்தானே ஆகவேணும் என்ற நிலையில், சட்டரீதியான, நுணுக்கமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அரசியல் ரீதியான பேச்சுக்களுக்கும், செயல்களுக்கும் தன் கணவரின் முடிவில் விட்டுவிடுகிறார். 

செய்தி மூலம், ஆங்கிலத்தில் படிக்க : - http://www.coastaldigest.com/index.php?option=com_content&view=article&id=26458:hijab-is-my-ornament-mumbai-corporator-afreen

THANKS TO ANNU

Friday, July 1, 2011

மாபெரும் பரிசு

* ""வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாம் தாம் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்; உங்களுக்கும் உணவளிக்கிறோம். உண்மையில் அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.''

திருக்குர்ஆன்(17:31)


நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

* ""ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால் இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்''
(நூல்: அபூதாவூத்)


* "" உங்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்களின் கடமை!''
(நூல்: அபூதாவூத்)


* ""தந்தை தன் பிள்ளைக்கு அளிக்கும் மாபெரும் பரிசு நல்லொழுக்கமே!''
(நூல்: திர்மிதி)